1 . கிழக்கே கதிரவன் கிளர்ந்தெழும் தருணமதில்
சழக்குகள் அகற்றி ஒழுக்கமாய் இருந்திடவும்
வழிக்குத்துணைநின்று ஒளிதரவேணும் எனவும்
விழிக்கையில் அவனைத்தொழுது விழிப்புடன் இருந்திடுவோம்
2. ஆதவன் அருள் இலையேல் உலகெலாம் இருளே
ஆதலினால் துதி செய்வோம் அவன்அன்பை உணர்ந்திடுவோம்
வெப்பமின்றி உயிரில்லை பரிதியின்றி பயிரில்லை
தப்பாமல் போற்றிடுவோம் தலைவணங்கி வாழ்த்திடுவோம்்,
3. பரிதியைப் பாரதி என்னவென்று புகல்கிறான்
'வெம்மைத் தெய்வமே', 'ஒளிக்குன்றே' என்கிறான்
'அறிவின் மகள் ஒளி' அவளே தெளிவு என்று
செம்மையாகச் சொல்லிவிட்டான் வசனத்தில் அன்று
4. சோதிப்பிழம்பவன் சோர்வினைப் போக்குபவன்
ஆதியுமாய் அந்தமுமாய் யாவுமாகி விளங்குபவன்
சூரியனை இதயத்தினுள்ளே இருத்தி வாழ்த்தி
வீரியம் பெற்றிடுவோம் ஆரியராய் வாழ்ந்திடுவோம்