1. பண்டரீபுரம் சென்றுவந்தோம்
பாண்டுரங்கனைப் பார்த்துவந்தோம்
கண்டு கண்டு மனம் நெகிழ்ந்தோம்
அண்டை அயலிடம் சொல்லி மகிழ்ந்தோம்
2. பண்டொருநாள் புண்டலீகன் பெற்றோர்க்கு செய்த சேவை
கண்டு மெச்சி கண்ணன் வந்தான் அவன் இல்லம் வந்துவிட்டான்
தொண்டு செய்த புண்டலீகன் அங்கவனைக் காக்க வைத்தான்
அண்டம் காக்கும் ஆண்டவனை செங்கல் மேல் நிற்க வைத்தான்
3. விண்ணின்று வந்துவிட்டு அங்கு அவன் காத்திருந்தான்
கண்ணன் அன்று தன் இடையில் கை வைத்து நின்றுவிட்டான்
புண்டலீகன் மனம் நெகிழ்ந்து இங்கேயே இரு என்றான்
வேண்டியபடி நின்றுவிட்டான் வரம்தரவே நிற்கின்றான்
4. பண்டரிபுரம் என்ற ஊர் பெருமைதனை பெற்றது
தொண்டனிடம் மகிழ்ந்த இறையின் உறைவிடமாய் ஆனது
நண்பர் ஒருவர் உதவியினால் அங்கு யாம் சென்றுவந்தோம்
நண்பருடன் சென்று வந்தோம் புண்ணியம் செய்திட்டோம்
5. விட்டோபா என்கின்றார் விட்டலன் என்றும் நவில்கின்றார்
அட்டதிக்கும் நிறைந்தவனை அங்கேயே காண்கின்றார்
ஆடுகிறார் பாடுகிறார் ஆனந்தம் அடைகின்றார்
ஆசையுடன் ருக்குமாயியும் அங்கே உறைகின்றாள்