மனம் குழைய அழைத்தால் நீ குழந்தையாய் வருவாயா ?
தமிழில் பாடி உனை அழைத்தால் தவழ்ந்திங்கு வருவாயா?
தளர்நடை நடந்துவந்தென் மடியினில் அமர்ந்து கொண்டு
மழலையில் மிழற்றும் உனை தழுவிமனம் மகிழ்வேனோ?
ஈரேழு உலகமதை உன்கருவில் உருவாக்கி ஓயாது ஒழியாது காக்கும் உன் புகழ்பாடி
பெரியோனாய் உனை எட்டத்தில் வைத்து விட்டால்
எளியவனாய் சிறுவனாய் என்னருகில் வருவாயா?
எழில்பொங்க குழலூதி மனம் கொள்ளை கொள்வாயா?
ஆழ்மனக் காதலுடன் ஆழிமழைக் கண்ணனை
குழவி ஆக்கிக் களிப்பெய்தி பண்ணிசைத்துப் பாராட்டி
நீராட்டி அமுதூட்டி தாலாட்டிப் பரிவு செய்த
பெரியாழ்வார் பெற்ற இன்பம் சிறியேன் நான் அடைவேனோ?

அன்புத் தோழி விஜி
பதிலளிநீக்குபுதிய களமிறங்கி
இனிய தமிழ் மொழியில்
அறிமுகம் செய்துகொண்டமைக்கு
வாழ்த்துக்கள் பல
Previous comment posted by Vaidehi Radhakrishnan
பதிலளிநீக்குஉலகின் மிக அழகிய குழந்தையை
பதிலளிநீக்குழ கர மாலை சூட்டி ,
தவழ்ந்தும் தளிர் நடையிலும் வந்து
மழலையில் மிழற்றி மகிழ்விக்க அழைத்த
அன்புத் தோழி விஜிக்கு
பலப் பல வாழ்த்துக்கள்
- வைதேஹி
அழகனுக்கு எழில்மிகு தமிழில் ழகர மாலை சூட்ட விழைந்து பாமாலை புனைந்ததை பழகிய தோழி
பதிலளிநீக்குவைதேஹி ரசித்து எமை ஆழ்மனதினின்று புகழ்ந்து பாராட்டியமைக்கு என் தாழ்மையான நன்றிகள்
உரித்தாகுக.