பிற்பகல் பொழுதொன்றில் விண்ணில் ஒரு விந்தை கண்டேன்!
விளையாட்டாய் வந்து விரைவில் மறைந்தாலும் உள்ளம் கொள்ளைபோனது
ஏழு நிறங்களும் ஏழு ஸ்வரங்களாய் நெஞ்சை நிறைக்க எழுதிவைத்தேன்
பகலவன் மேல் மோகம் கொண்டு முகில்கள் வந்தன மழை பொழிந்தன
சூரியக்கதிர் ஒருபுறம் மாரியின் சதிர் மறுபுறம்!
கண்ணுக்கினியதாய் வண்ணமயமானதாய் நிகழ்ந்தது ஒரு விழா ஆங்கே
கானக்குயிலும் மோனமயிலும் மயங்கும் ஒரு வண்ண வில் வானில் விளைந்தது!
விளையாட்டாய் வந்து விரைவில் மறைந்தாலும் உள்ளம் கொள்ளைபோனது
தெள்ளத்தெளிவானது!
ஏழு நிறங்களும் ஏழு ஸ்வரங்களாய் நெஞ்சை நிறைக்க எழுதிவைத்தேன்
இதை ஏழு வரிகளில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக