1. அன்று இவ்வுலகம் அளந்தான் பெரியவன்
இன்றிங்கு நம்மிடையே ஒளிர்ந்தார் பெரியவா
சென்றங்கு இருந்துகொண்டு ஒளிக்காட்டி வழிகாட்டி
என்றென்றும் கருணையுடன் கைபிடித்துச் செல்லட்டும்
2. காலடிஆசானின் பாதையில் சென்று அவர்
காலடிச் சுவடுகளை ஆதாரமாய்பற்றி
மாலடியைப் பற்றிவிட்டால் குறையொன்றும் இலையென்று
நாலடியில் நவின்று நமை நன்மைபெறச் செய்துவிட்டார்
3. சங்கரனும் ஐங்கரனும் ஷண்முகனும் சேர்ந்து
சங்கரனாய் இங்கெமை உய்விக்க வந்தனரோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் வந்து
தங்கமாநகர் காஞ்சியில் சிங்கமாய் அமர்ந்தாரோ
4. அன்று அந்த ஸ்வாமிநாதன் தகப்பனுக்கு குருவானார்
இன்றிந்த ஸ்வாமிநாதன் உலகுக்கே குருவானார்
பாலனாய் காஞ்சிவந்து துறவியாய் அமர்ந்தாரே
சீலனாய் நமையெல்லாம் வழிநடத்திச் செல்கிறாரே
அருமையான பதிவு. வர்ணிப்பதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அனைத்தும் மகாபெரியவா மின் கருணை
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.அவர் விரும்பினார் ,எனை செய்ய வைத்தார்.
பதிலளிநீக்குஎன் கடன் பணி செய்து கிடப்பதே.
கருணைக் கடலான கஞ்சிமாமுனியின் கடாக்ஷத்திலுதித்த கருவை கண்மணிக் குழந்தையாகக் கண்டு களித்தேன்.
பதிலளிநீக்குயதுகை அலங்காரத்துடன் பிறந்துள்ள அழகிய குழந்தை.
நன்றி வைதேஹி. என்னுடைய மனக்குழந்தைகள் உங்கள் ஊக்கத்தினால் பிறந்து மேலும் மேலும் நன்றாக வளமாக வளர வேண்டும் என்று வாழ்த்துங்கள்🙏
பதிலளிநீக்குWow amazing, உங்களுக்கு பெரியவா கடாக்ஷம் பரிபூரணமாக இருக்கு, என்றென்றும் உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநன்றி ஜெயஸ்ரீ.அவர் நினைக்கவில்லையென்றால் எதுவுமே நடக்காது.இது அவர் விருப்பத்தினால் விளைந்தது.
பதிலளிநீக்கு