சனி, 7 மார்ச், 2020

நீயேஎன்தாய்


1. அன்னை அடித்தால் அவளையே சென்றணைத்து

   கன்னமொடு கன்னம் வைத்து அழுதிடும் மதலைபோல்

   என்னை நீ சோதனையால் எத்தனைதான் அடித்தாலும்

   உன்பதமே பற்றி கண்ணீரால் கழுவிடுவேன்


2. அழுது அடம் செய்து சாதித்திடும் குழவிபோல்

   விழுந்தெழுந்து தப்பாமல் எப்போதும் உனைவேண்டி

   தொழுது உன்னிடம் துயர்சொல்லி அழுதிடுவேன்

   வழுத்தி உனை இரந்து வேண்டியது பெற்றிடுவேன்


3. விளையாடும் குழந்தை பெற்றவளை நினைப்பதில்லை

   விழுந்து காயமுற்றால் அம்மாவென வருவதுபோல்

   விளையாடும் என்வினை எனைவென்று நகைக்கயில்

   அழுந்தும் வாதனையால் இறைவா உனை சரணடைவேன்


4. உன் நினைவு என்னுள்ளே குருதிபோல் ஓடிடினும்

   என் மனம் மயங்கி சற்றுன்னை மறந்திடினும்

    மன்னித்து நீ எனை ஏற்பாய் நான்அறிவேன்

    என்னுடைய தாய் நீதான் இறையோனே

2 கருத்துகள்:

  1. அருமை அருமை அற்புதமான வரிகள் 🙏🙏

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயஶ்ரீ. இந்த ஊக்கமும் இறைவனின் அருளும்தான் எனக்கு மேன்மேலும் எழுத புத்துணர்ச்சி கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு