1. பெரியவனாய் மிகமிகப் பெரியவனாய் வளர்ந்து நின்றாய்
அரிய பெரிய தத்துவத்தைப் போர்க்களத்தில் பேசிநின்றாய்
உரியதொரு தருணமதில் உண்மைகளை உரைத்துநின்றாய்
சிரித்தபடி பார்த்தனுக்கு சீரியவை சொல்லிநின்றாய்
2. கள்ளத்தனம்செய்து கயிற்றினால் கட்டுண்டாய்
பிள்ளைகளுடன்கூடி களவாடி களி கொண்டாய்
அள்ளிஅள்ளி வெண்ணையுண்டு அன்னையிடம் சிக்குண்டாய்
வெள்ளை மனத்தவனாய் உள்ளமதை கொள்ளை கொண்டாய்
3.சின்னவனாய் இருக்கையிலே பெரியவையாய் பலசெய்தாய்
அன்னையென்று வந்தவளை உயிர்குடித்து அழியவிட்டாய்
பின்னை ஒருநாளில் பகைகெடுக்கப்பரிந்துவந்தாய்
என்னே உன்லீலைகள் என்றெனை பாடவைத்தாய்
4.உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொடுத்தெமை ஆடவிட்டாய்
மணம்கமழும் கீதையினை பார்த்தனுக்கு போதித்தாய்
பிணங்குகொள் மனதினை நிலைப்படுத்த வழிசொன்னாய்
இணங்கி அதுவந்துவிட்டால் அறிவேன் நீ எமைக்காப்பாய்
அருமை
பதிலளிநீக்குரேவதி
பதிலளிநீக்குஅழகிய குட்டிக்கண்ணனின் லீலைகள் முதல் கீதோபதேசம் செய்த பார்த்தன் வரை கண்முன்னே கொணர்ந்த அருமை யான மனக்குழந்தையைத் தவழவிட்ட விஜி, பாராட்டுக்கள் பலப்பல💐💐👍👍👌👌
பதிலளிநீக்குரமேஷ்,ரேவதி இந்த தளத்துக்கே வந்து உங்கள் இருவரின் கருத்துக்களை வெளியிட்டதற்கு மிக்க நன்றி்
பதிலளிநீக்குவைதேஹி உங்நகளுக்கு என் நன்றிகள் பலப்பல.உங்கள் உடனடி பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஎப்போதும் நீங்கள் கொடுக்கும் ஊக்கம் எனக்கு பெரிய பலம்.அது மாத்திரம் அல்ல இன்னும் மேன்மேலும் படைக்க என்னைப் படைத்தவன் எனக்கு அருள் வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை
🙏🙏🙏🙏
பதிலளிநீக்கு👏🤗
பதிலளிநீக்கு