செவ்வாய், 17 மார்ச், 2020

ரோகமே நீ வேகமாகப் போய்விடு

நோய்க்கொரு மருந்தில்லை
ஓய்வெடுக்க நேரமில்லை
போய்க்கொண்டிருக்குது காலம்
தோய்ந்தருக்குது உலகு துயரில்

மருந்தொன்று கண்டோம் பிணி தீர்க்க என்கிறார்
இருந்து வாழ்ந்திடவே வழியொன்றும் சொல்கிறார்
விருந்தொன்றும் வேண்டாம் இன்றிங்கெங்களுக்கு
திருந்தி மட்டுமே வாழ்ந்திருந்தால் வரும்சுகம் என்றிடுவேன்

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியவில்லை
இங்கே எதுவுமே நன்றாகவே இல்லை
அங்கே இங்கே என்று எங்கேயும் ரோகமென்றால்
எங்கே செல்வது அடைக்கலம் யார் தருவர்?

மோகத்தை எல்லாம் விட்டொழித்து வாழ்ந்திருந்து
போகத்தையெல்லாம் இங்கு சற்றேனும் மறந்திருந்து
யோகாசனம் பயின்று தியானத்தில் அமர்ந்திருந்தால்
வேகமாக வரும் இறை வினை தீர்ப்பர் உண்மை அன்றோ

-The painful thought of the Coronavirus pandemic led to this outburst last night.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக